‘மாமனிதன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ?.. விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்…

‘மாமனிதன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ?.. விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்…

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்ம துரை’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவரவிருக்கும் படம் ‘மாமனிதன்’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் நடிகை காயத்ரி இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

‘மாமனிதன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ?.. விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்…

யுவனின் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டே தயாராக இப்படம் நீண்ட இழிப்பறிக்கு பிறகு ரிலீசாக தயாரானது. பிறகு விநியோக உரிமை கொடுப்பதில் பிரச்சனை, மாமனிதன் டைட்டிலில் ஏற்பட்ட சிக்கல் என அனைத்து பிரச்சனைகளும் களையப்பட்டு ஒரு வழியாக ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது மாமனிதன்.

‘மாமனிதன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ?.. விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்…

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இப்படத்தை தயாரித்துள்ள ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி வரும் ஏப்ரல் 7ம் தேதி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story