மம்முட்டி வீட்டில் மோகன் லால்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

மம்முட்டி வீட்டில் மோகன் லால்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

மலையாள நடிகர் மம்மூட்டி வீட்டில் நடிகர் மோகன் லால் திடீரென சந்தித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக கலக்கி வருபவர்கள் மம்முட்டியும், மோகன் லாலும். நம்ம ஊர்ல ரஜினி, கமல் போல இவர்களுக்கு ரசிர்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது.

மம்முட்டி வீட்டில் மோகன் லால்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

மம்முட்டி, மோகன் லால் ரசிகர்கள் மலையாளத்தில் எலியும், பூனை போலதான் இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்முட்டி படங்கள் வரும்போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

மம்முட்டி வீட்டில் மோகன் லால்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

ஆனால் மம்முட்டிக்கும், மோகன்லாலுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில் மம்முட்டி புதிதாக கட்டி உள்ள வீட்டுக்கு மோகன்லால் திடீரென்று சென்று அவரை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது. இருவரும் பிருதிவிராஜ் இயக்கத்தில் தயாராகும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

 

Share this story