சிம்புவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ்!

சிம்புவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ்!

சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ திரைப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு குழந்தையாக இருக்கும் போதே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். பள்ளிக்கூட பாடங்களை விட சினிமா பாடத்தை தான் அதிகமாகக் கற்றுக் கொண்டார் என்றே கூறலாம். குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்த சிம்பு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாகத் தன் திரைவாழ்க்கையைத் துவங்கினார். ஹீரோவான சிம்புவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ‘மன்மதன்’ படம் தான்.

சிம்புவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ்!

2004-ம் ஆண்டு ஏஜே முருகன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மன்மதன் படம் வெளியானது. அந்தப் படம் வெளியான போது சிம்புவுக்கு 20 வயது தான். பெண்களைக் காதல் வலையில் விழ வைக்கும் பிளே பாயாக மிரட்டியிருந்தார் சிம்பு. அந்தப் படத்தில் இரண்டு பாடல்களையும் சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மன்மதன் படம் தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

சிம்புவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ்!

தற்போது மன்மதன் திரைப்படம் மீண்டும் நவீன வடிவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதி முதல் மன்மதன் படத்தை நாம் தியேட்டர்களில் மீண்டும் பார்க்கலாம்.

Share this story

News Hub