‘மாஸ்டர்’ உருவான விதம்… படக்குழு வெளியிட்ட புது வீடியோ…

‘மாஸ்டர்’ உருவான விதம்… படக்குழு வெளியிட்ட புது வீடியோ…

மாஸ்டர் படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை வீடியோ தொகுப்பாக படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் சூப்பர் ஹிட் படம் மாஸ்டர். புது தோற்றத்தில் வாத்தியாக இப்படத்தில் நடித்துள்ளார் விஜய். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

‘மாஸ்டர்’ உருவான விதம்… படக்குழு வெளியிட்ட புது வீடியோ…

பவானி கேரக்டரில் விஜய் சேதுபதி அபாரமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அனிரூத் கலக்கியுள்ளார். இப்படி மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாற்றியுள்ளார் இயக்குனர்.

இந்த மாதிரி ஒவ்வொரு காட்சிகளும் எவ்வாறு படமாக்கப்பட்டது, சண்டைக்காட்சிகளில் விஜய் எப்படி நடித்தார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான காட்சிகள் உள்ளிட்ட தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this story