‘மூக்குத்தி அம்மன்’ படைத்த சாதனை… உருக்கமாக நன்றி தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

‘மூக்குத்தி அம்மன்’ படைத்த சாதனை… உருக்கமாக நன்றி தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

‘மூக்குத்தி அம்மன்’ படம் தான் நயன்தாரா இதுவரை கடிதத்திலேயே மிக அதிக ஓப்பனிங் பெற்ற படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி-யில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் மூக்குத்தி அம்மன் தான்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று டிஸ்னி ஹாட்ஸ்ஸ்டாரில் வெளியானது.

‘மூக்குத்தி அம்மன்’ படைத்த சாதனை… உருக்கமாக நன்றி தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

மதங்களை வைத்து அரசியல் செய்வோர், மக்களை ஏமாற்றுவோர் ஆகியோரை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் நயன்தாரா அம்மனாக சிறப்பாக நடித்திருந்தார்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படம் நயன்தாரா நடித்ததிலே மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற படமாக அமைந்துள்ளது. மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி-யில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் மூக்குத்தி அம்மன் தான்.

‘மூக்குத்தி அம்மன்’ படைத்த சாதனை… உருக்கமாக நன்றி தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

“நாங்கள் மூக்குத்தி அம்மன் படத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, ​​படம் முடிந்தவரை பலரைச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், இன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியானவுடன் அந்த கனவு நனவாகியுள்ளது. கதையின் கவனம் மிகவும் பெரியதாகவும் ஆழமாகவும் இருக்கும்போது நகைச்சுவை கடினமானது; மேலும் படத்தைப் பார்வையாளர்கள் நன்றாக வரவேற்றுள்ளனர். மூக்குத்தி அம்மனின் ஒட்டுமொத்த குழு சார்பாக, தீபாவளியன்று எங்களை தங்கள் வீடுகளுக்கு வரவேற்று, இந்த திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றியமைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Share this story