Wednesday, March 3, 2021

Movie Stills

மெல்போர்ன் விருது விழாவை நிறைவு செய்த நிவின் பாலியின் ‘மூத்தோன்’!

நிவின் பாளி நடித்துள்ள மூத்தோன் படம் மெல்போர்ன் இந்திய விருது விழாவில் இறுதி கட்டத்திற்கு தேர்வான படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் ‘மூத்தோன்’. இதில் நிவின் பாலியுடன் சசங் அரோரா, சோபிதா துலிபலா, மெலிசா ராஜூ தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நிவின் பாலி, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லட்சத்தீவிலிருந்து தனது அண்ணனைத் தேடி மும்பை வரும் தம்பியின் கதையே மூத்தோன்.

இப்படம் மலையாளம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. படம் வெளியாகும் முன்பே ‘டொரன்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மூத்தோன்’ படம் திரையிடப்பட்டது.

இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா (IFFM) தொடங்கியது, இதில் குறும்படங்கள், திரைப்படங்கள் ஆவணப்படங்கள் உட்பட 17 மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இடம்பெற்றன. அதில் மூத்தோன் திரையிடப்பட்டது. இப்படம் இந்த விருது விழாவின் நிறைவு செய்யும் படமாக திரையிடப்பட்டுள்ளது. அப்படத்தின் அழுத்தமான கதைக்காக இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

திரிஷ்யம் 2 கதையை நானே ரெடி செய்யப்போகிறேன்… ரசிகர்களுக்கு ஜீத்து ஜோசப் வேண்டுகோள்…

திரிஷ்யம் 3 கதையை ரசிகர்கள்‌‌அனுப்பவேண்டாம் நானே தயார் செய்யப்போகிறேன்‌ என ஜீத்து ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில்...

புது சீரியலில் நடிகை தேவயானி… விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது…

புதிய சீரியல் ஒன்றில் நடிகை தேவயானி நடிக்கவிருக்கிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 90-களில் முன்னணி நடிகையாக...

Actress

TTN Cinema