‘லவ்வர்ஸ் டே’ கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி… வைரலாகும் புகைப்படம் !

‘லவ்வர்ஸ் டே’ கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி… வைரலாகும் புகைப்படம் !

காதலர் தினத்தையொட்டி தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

‘லவ்வர்ஸ் டே’ கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி… வைரலாகும் புகைப்படம் !

நட்சத்திர காதல் ஜோடியாக திரையுலகில் ஜொலிப்பவர்கள் – நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். ‘நானும் ரவுடிதான்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றி வரும் இந்த காதல் ஜோடி, திரைப்படங்களிலும் பிசியாக உள்ளனர்.

‘லவ்வர்ஸ் டே’ கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி… வைரலாகும் புகைப்படம் !

இதையடுத்து சொந்தமாக ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனம் நெற்றிக்கண், ராக்கி, காத்து வாக்குல ரெண்டு காதல், சர்வதேச விருதுபெற்ற கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் நட்சித்திர ஜோடியான நயன்தாரா-விக்னேஷ் சிவன், காதலரை தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சமூக வலைத்தளத்தில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன், இருக்கும் புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this story