தனுஷின் வரிகள் மற்றும் குரலில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்!

தனுஷின் வரிகள்  மற்றும் குரலில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்!

தனுஷ் குரல் மற்றும் எழுத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் நேத்து பாடல் வெளியாகியுள்ளது.

ஜகமே தந்திரம் படத்தின் மூன்றாம் பாடலான நேத்து பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளது மட்டுமில்லாமல் பாடலுக்கு வரிகளும் எழுதியுள்ளார். எனவே இந்த பாட்டு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது ‘நேத்து’ பாடல் வெளியாகியுள்ளது.

தனுஷின் வரிகள்  மற்றும் குரலில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்!

இந்தப் பாடல் முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஹீரோயினை ரொமான்ஸ் செய்யும் நோக்கத்தில் நெருங்கும் தனுஷ், அதை எச்சரிக்கையாகக் கையாளும் ஐஸ்வர்யா லக்ஷ்மி என பாடல் அமைந்துள்ளது.

சந்தோஷ் நாராயணின் இசை ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நேத்து பாடலும் கேட்பதற்கு இனிமையான மெலடி பாடலாக அமைந்துள்ளது.

தனுஷின் வரிகள்  மற்றும் குரலில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்!

கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார். இந்தியா திரும்பியதும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்த கட்ட படபிடிப்பைத் தொடர உள்ளார்.

Share this story