நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நானும் ரௌடி தான் படம் வெளியாகி நேற்றோடு(அக்டோபர் 21) ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. அதை முன்னிட்டு நயன்தாரா கண் தெரியாதவராக நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இது நயன்தாராவின் 65-வது படமாகும்.

நானும் ரௌடி தான் படம் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. திரை வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி. நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டது இந்தப் படத்தில் தான். எனவே அந்தப் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நாளில் தான் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் போஸ்டர் வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Share this story