லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்… சர்ச்சையைக் கிளப்பும் லிப்லாக் முத்தக்காட்சி!

லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்… சர்ச்சையைக் கிளப்பும் லிப்லாக் முத்தக்காட்சி!

நித்யா மேனன் தென்னிந்திய நடிகைகளில் மிகவும் திறமை வாய்ந்த ஒருவர். தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார். ‘செவென் ஓ க்ளாக்’ என்ற கன்னட படத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் சித்தார்த் நடித்த ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். ஓகே கண்மணி, மெர்சல் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக உருவெடுத்தார். தமிழில் கடைசியாக சைக்கோ படத்தில் நடித்ததற்காக பலரால் பாராட்டப்பெற்றார்.
லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்… சர்ச்சையைக் கிளப்பும் லிப்லாக் முத்தக்காட்சி!
நித்யா மேனன் தற்போது அபிஷேக் பச்சனுடன் ‘பிரீத் இன் டூ தி ஷேடோஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அமேசான் பிரேமில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நித்யா ஒரு பெண்ணிற்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்… சர்ச்சையைக் கிளப்பும் லிப்லாக் முத்தக்காட்சி!
நித்யா மேனன் ஏற்கனவே நானி தயாரிப்பில் வெளியான ‘ஆவ்’ (Awe) என்ற தெலுங்கு படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நித்யா தொடர்ந்து லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அவரது தைரியம் ஒரு பக்கம் பாராட்டப்பட்டாலும் மறுபக்கம் பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.

Share this story