பழம்பெரும் நடிகையாக நடிகை தமன்னா ?… விரைவில் அறிவிப்பு…

பழம்பெரும் நடிகையாக  நடிகை தமன்னா ?… விரைவில் அறிவிப்பு…

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை தமன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழம்பெரும் நடிகையாக  நடிகை தமன்னா ?… விரைவில் அறிவிப்பு…

இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர், நடிகைகள் என பலர் தங்களது துறை சார்ந்து அந்த காலங்களில் புகழ்பெற்று விளங்கினர். அவ்வாறு சிறந்து விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வருகிறது. குறிப்பாக காந்தி, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற மாபெரும் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

பழம்பெரும் நடிகையாக  நடிகை தமன்னா ?… விரைவில் அறிவிப்பு…

அதுபோன்று என்.டி.ராமராவ், சரோஜாதேவி போன்ற பழம்பெரும் நடிகர், நடிகர்கள் பயோபிக்கும் திரைப்படங்களாக வெளியாகின. 80களில் நடித்த புகழ்பெற்ற நடிகையான சில்க் சுமிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை வித்யாபாலனும், பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்-ம் நடித்துள்ளன. மாபெரும் வெற்றி இந்த திரைப்படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக வந்தது.

பழம்பெரும் நடிகையாக  நடிகை தமன்னா ?… விரைவில் அறிவிப்பு…

இதைத்தொடர்ந்து சச்சின், தோனி போன்ற விளையாட்டு வீரர்களின் திரைப்படங்களும் வெளியாகி வெற்றிப்பெற்றன. தற்போது பாலிவுட் நடிகை கங்கனா நடிப்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதேபோன்று அப்துல் கலாம், ஸ்ரீதேவி போன்றோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவர காத்திருக்கின்றன.

பழம்பெரும் நடிகையாக  நடிகை தமன்னா ?… விரைவில் அறிவிப்பு…

இந்நிலையில் 60-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜமுனா. இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த பயோபிக் படத்தில் ஜமுனாவின் கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமன்னாவிடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Share this story