இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக்காகும் பார்த்திபனின் தேசிய விருது படம். சூப்பர் அப்டேட்..

இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக்காகும் பார்த்திபனின் தேசிய விருது படம். சூப்பர் அப்டேட்..

தேசிய விருதுபெற்ற ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக்காகும் பார்த்திபனின் தேசிய விருது படம். சூப்பர் அப்டேட்..

எழுத்து, இயக்கம், நடிப்பு என மூன்றையும் ஒரே ஆளாக இருந்து உருவாக்கிய, ஒரு வித்தியாசமான திரைப்படம் ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’. ஒரே ஒரு கதாபாத்திரம், சுற்றி இருக்கும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் சேர்த்து நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருப்பார் பார்த்திபன். விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவை செய்திருந்தார்.

இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக்காகும் பார்த்திபனின் தேசிய விருது படம். சூப்பர் அப்டேட்..

இதேபோன்று இந்த படத்தின் பின்னணி இசைக்கு உயிரோட்டம் கொடுத்திருந்தார் சி.சத்யா. இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருந்தார் சந்தோஷ் நாராயணன். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படத்தை பயோஸ்கோப் பிலிம் தயாரித்தது. பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில் சூப்பர் ஹிட்டடித்த இப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாக உள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகர் பார்த்திபன், என் தமிழ் அழகு.என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ். தட்டுத்தடுமாறி ஆங்கிலமும்,தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.ஹிந்தி முஜே நஹி மாலும் ஹே! But ‘ஒத்த செருப்பு’ ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால்,இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு Conti 1/2 என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story