‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது… கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபன்…
ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளதால் கேக் வெட்டி நடிகர் பார்த்திபன் கொண்டாடியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. ஒரு படத்தை இப்படியும் உருவாக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர் பார்த்திபன். ஒரே ஒருவரை வைத்து ஒரு படத்தை இயக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளித்திருந்தது இந்த படம். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பணியை ஒரே ஆளாக செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு இப்படம் உயர்த்தி காட்டியுள்ளது. இதில் பல குரல்களை வைத்து கதாபாத்திரங்களை இந்த படத்தில் உருவாக்கியிருந்தார் பார்த்திபன். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு தேசிய விருது, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் இந்த படத்திற்கு விருது கொடுக்கப்படுகிறது. இதனிடையே நடிகர் பார்த்திபன் இரவில் நிழல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒத்த செருப்புக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததால், அந்த படக்குழுவினரோடு இணைந்து பார்த்திபன் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து படக்குழுவினர் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.