அசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு!

அசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு!

ஓடிடி தளங்களின் ஆதிக்கம் இனி ரீமேக் படங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இப்போது இந்தியாவிலும் ஓடிடி என்ற புதிய பரிணாமம் புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த லாக்டவுன் காலம் ஓடிடி தளங்களுக்கு பொற்காலமாக அமைந்துவிட்டது. இந்திய மக்கள் பெரும்பாலானோர் இந்த லாக்டவுன் காலத்தில் ஓடிடி தளங்களில் கணக்கு தொடங்கியுள்ளனர்.

தியேட்டர் கலாச்சாரத்தை பார்த்து வந்த மக்களுக்கு ஓடிடி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. மறுபுறம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இது சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

அசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு!

முன்பெல்லாம் வேறு மொழியில் எதாவது படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலோ, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தாலோ உடனே நம்ம இயக்குனர்கள் அதை ரீமேக் செய்யும் உரிமையை போட்டிபோட்டு வாங்கி ரீமேக் செய்துவிடுவர். கோலிவுட்டில் பல நடிகர்களுக்கு ரீமேக் படங்கள் தான் பல ஹிட் படங்களைக் கொடுத்து அவர்களின் மார்க்கெட்டை உயர்த்தியது.

மற்ற மொழியில் வெளியான படங்களை அந்த மொழியில்லாத வேறு மாநில மக்கள் பார்த்திருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ஓடிடி இந்த இடைவெளியை நீக்கிவிட்டது. உதாரணத்துக்கு கன்னட மொழியில் வெளியாகும் ஒரு படத்தை இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுதும் உள்ள மக்கள் தற்போது பார்க்கமுடியம். அதுவும் பெரும்பாலான படங்கள் அந்த வட்டார மொழி மற்றும் சப்டைட்டிலுடன் வெளியாகிறது. இது பார்வையாளருக்கு உலகின் பல மொழிப் படங்களை பார்க்க வழிவகை செய்கிறது.

எனவே இனி ஒரு மொழியில் வந்த படத்தை மற்ற மொழி பார்வையாளரும் உடனே அதுவும் அவர்கள் மொழியிலே பார்க்கும் வசத்தில் ஏற்பட்டுவிட்டதால் ரீமேக் படங்களுக்கு வரவேற்பு குறைந்துவிடும்.

அசுர வளர்ச்சியில் ஓடிடி… இனி ரீமேக் படங்களுக்கு ஆப்பு!

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. த்ரிஷ்யம் முதல் பாகம் வெளியான போது இந்தியாவின் பல மொழிகளின் அப்படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்தது. ஆனால் தற்போது வெளியாகவிருக்கும் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ரீமேக் செய்ய எந்த மொழியில் ஆர்வம் காண்பிக்கவில்லை. காரணம் ஓடிடி தான்.

எனவே இனி வரும் காலங்களில் படைப்பாளிகளுக்கு வேலை அதிகமாகிவிடும் என்பது உறுதி!

Share this story