நெட்ஃபிளிக்சில் வெளியாகும் ‘பாவ கதைகள்’ ட்ரைலர் அப்டேட் வெளியானது!

நெட்ஃபிளிக்சில் வெளியாகும் ‘பாவ கதைகள்’ ட்ரைலர் அப்டேட் வெளியானது!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் “பாவகதைகள்” அந்தாலஜி படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.

சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது.

நெட்ஃபிளிக்சில் வெளியாகும் ‘பாவ கதைகள்’ ட்ரைலர் அப்டேட் வெளியானது!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் முதல் தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது. சில தினங்களுக்கு முன்பு “பாவகதைகள்” டீசர் வெளியாகியது.

காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

நெட்ஃபிளிக்சில் வெளியாகும் 'பாவ கதைகள்' ட்ரைலர் அப்டேட் வெளியானது!

சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ பகுதியில் பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் கருப்பசாமி, சுதா கொங்கரா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ண உட்ரனும்’ பகுதியில் அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றி மாறன் இயக்கியுள்ள ‘இரவு’ பகுதியில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள ‘வான்மகள்’ பகுதியில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது பாவக்கதைகள் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

Share this story