புதுசா லேம்போர்கினி கார் இறக்கி கெத்தாக வலம் வரும் பிரபாஸ்!
நடிகர் பிரபாஸ் தான் புதிதாக வாங்கியிள்ள லேம்போர்கினி காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ் கார்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர். அதனால் பல புதுவித கார்களை வாங்கி சேகரித்து வருவார். பிரபாஸ் அப்பாவின் பிறந்தநாள் அன்று அவர் இந்த லேம்போர்கினி காரை வாங்கியுள்ளார். லேம்போர்கினியின் இந்த மாடலை பிரபாஸ் இந்தியாவில் இரண்டாவதாக வாங்கியுள்ளார். இது லம்போர்கினி அவென்டடோர் எஸ் ரோட்ஸ்டர் எல்பி 740_4 வகையைச் சேர்ந்தது.
தனது அப்பாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரபாஸ் தனது புதிய லேம்போர்கினி காரை எடுத்துக்கொண்டு சாலையில் ஒரு ரவுண்டு அடித்துள்ளார். பின்னர் தனது புதிய காரின் அருகில் கெத்தாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபாஸ் தற்போது இந்தியாவின் பிரம்மாண்ட நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் தற்போது நடித்து வரும் படங்கள் யாவும் குறைந்தது 300 கோடி பட்ஜெட் கொண்ட படங்களாக இருக்கின்றன. ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் ராத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்திலும் பிரபாஸ் நடிக்க உள்ளார்.