பா.ரஞ்சித்தின் அரசியல் படத்தில் ‘யோகிபாபு’ ‘பொம்மை நாயகி’ ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

பா.ரஞ்சித்தின் அரசியல் படத்தில் ‘யோகிபாபு’  ‘பொம்மை நாயகி’                        ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

இயக்குனர் ரஞ்சித்-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் பொம்மை நாயகி படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை இயல்பாக திரையில் காட்டி புகழ் பெற்றார். இதையடுத்து மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியுள்ளார்.

பா.ரஞ்சித்தின் அரசியல் படத்தில் ‘யோகிபாபு’  ‘பொம்மை நாயகி’                        ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…
Director Pa.Ranjith at Attakathi Shooting Spot

ரஜினியின் காலா படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தனது சொந்த நிறுவனமான ‘நீலம்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் பா.ரஞ்சித். இந்த நிறுவனம் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’  போன்ற வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது.

பா.ரஞ்சித்தின் அரசியல் படத்தில் ‘யோகிபாபு’  ‘பொம்மை நாயகி’                        ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

இதையடுத்து தற்போது ’சல்பேட்டா பரம்பரை’  என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். நடிகர் ஆர்யா நடிக்கும் இப்படம், வடசென்னை சேர்ந்த குத்துச்சண்டை வீரரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. யோகிபாபு நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். பொம்மை நாயகி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் அரசியல் காமெடி படமாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story