9 இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் நவரசா… பொன்ராம், கௌதம் கார்த்திக் கூட்டணியின் பாகம் முடிந்தது!

9 இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் நவரசா… பொன்ராம், கௌதம் கார்த்திக் கூட்டணியின் பாகம் முடிந்தது!

நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் நவரசா அந்தாலஜி படத்தின் இயக்குனர்கள் நடிகர்கள் உள்ளிட்டோர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

Image

நவராசாவின் 9 இயக்குனர்களில் பொன்ராமும் ஒருவர். இந்தப் பட்டியலில் மற்ற இயக்குனர்களை விட பொன்ராம் சற்று வித்தியாசமானவர் என்று கூறலாம். அவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே நகைச்சுவை கலந்த படங்களாக இருந்து வருகின்றன. எனவே இந்த சீரிஸில் பொன்ராம் இணைந்திருப்பது சீரிஸ் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.

9 இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் நவரசா… பொன்ராம், கௌதம் கார்த்திக் கூட்டணியின் பாகம் முடிந்தது!

தற்போதைய இயக்குனர் பொன்ராம் நவரசா படத்தில் தனது பாகத்தை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாகத்திற்கு ‘டவுன் பஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கௌதம் கார்த்திக், ரோபோ சங்கர், பிக்பாஸ் சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பாகம் முழுவதும் கொடைக்கானல் பகுதியில் 4 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Share this story