அல்லு அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு பூஜா ஹெக்டேவின் வேடிக்கையான பதிவு!
டோலிவுட் திரையுலகில் சமீபத்தில் கொரோனாவால் டோலிவுட் திரையுலகில் பாதிக்கப்பட்டிருப்பது நடிகர் அல்லு அர்ஜுன் தான்.
கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து தான் கொரோனவால் பாதிக்கப்பட்ட செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டதுடன் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகை பூஜா ஹெக்டே அல்லு அர்ஜூனுக்குக்கு வேடிக்கையான பதிவுடன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
“பண்டு தற்போது அமுல்யாவுக்கு கம்பெனி கொடுக்க வந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் அல்லு அர்ஜுன். உங்களுக்கு நிறைய ஆற்றல் மற்றும் ஒளியை அனுப்புகிறேன். நீங்கள் எல்லா நேரத்திலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஆலவைகுண்டபுரம்லோ’ படத்தில் பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் இருவரும் பண்டு மற்றும் அமுல்யா என்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதை வைத்து தான் பூஜா இந்த ஜாலியான பதிவை இட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான் பூஜா ஹெக்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவரும் தற்போது தனிமையில் தான் இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ படம் உருவாகி வருகிறது. பூஜா ‘தளபதி 65’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.