“என் மீது பொழிந்த அத்தனை அன்பிற்கும் நன்றி”… ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த பூஜா ஹெக்டே!
கொரோனா பாதித்திருந்தாக தெரிவித்திருந்த நிலையில் ரசிகர்களை காண்பித்த அக்கரைக்கு பூஜா ஹெக்டே நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா தனது இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக திரைத்துறையில் பல பிரபலங்கள் கொரோனா பாதிப்படைந்து வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டே சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
பூஜா ஹெக்டே ஜார்ஜியாவில் நடந்து வரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். 100 பேர் வரை கலந்துக்கொண்ட இந்த படத்தின் ஷூட்டிங் 16 நாட்கள் வரை நடைபெற்றது. ஏற்கனவே படப்பிடிப்பில் இருவருக்கு கொரோனா என்று தகவல் வந்தது. அதையடுத்து பூஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
பூஜா இதைத் தெரிவித்ததும் அவருடைய ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினர். சமூக வலைத்தளங்கள் முழுதும் பூஜா ஹெக்டே தான் நிரம்பியிருந்தார். இதனால் நெகிழ்ந்த பூஜா தற்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நீங்கள் என் மீது பொழிந்த அனைத்து அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் தற்போது நன்றாக இருக்கிறேன். லேசான அறிகுறிகள் உள்ளது. நீங்கள் தான் என்னை புன்னகைக்க வைக்கிறீர்கள். லவ் யூ” என்று தெரிவித்துள்ளார்.