ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்!

ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்!

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மெட்ரோ நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தற்போது முன்னணி இளம் கதாநாயகியாக முன்னேறி வருகிறார். 6 படங்களுக்கும் மேல் கைவசம் வைத்திருக்கிறார்.

தற்போது ‘ஐரா’ படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் மெட்ரோ படத்தின் பிரியா பவானி ஷங்கர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மெட்ரோ சிரிஷும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்!

“இந்தப் படம் ஒரு கொலையைச் சுற்றி வரும் ஒரு மிஸ்டரி திரில்லர் கதை அமைப்பில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு டிவி நிருபராக நடிக்கிறார். ப்ரியா தான் இந்தப் படத்தின் முன்னணி கதாபாத்திரம். குற்றத்தை ஆராய ஆரம்பிக்கும் ப்ரியா எப்படி கொலைகாரனைக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை.

ப்ரியா மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் படம் இதுவாகத் தான் இருக்கும். சிரிஷ் ப்ரியாவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்கள் இருவருக்குமிடையே காதல் இருக்காது.” என்று நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

Share this story