எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? பேமிலி மேன் வெப் சீரிஸால் கடுப்பான தயாரிப்பாளர்!

எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? பேமிலி மேன் வெப் சீரிஸால் கடுப்பான தயாரிப்பாளர்!

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் ஈழத் தமிழர்களின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(03-06-2021) இரவு இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. அதற்கு முன் வெளியான ட்ரைலரில் ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அதையடுத்து அந்த வெப் சீரிஸைத் தடை செய்யவேண்டும் என்று பலர் வலியுறுத்தினர்.

எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? பேமிலி மேன் வெப் சீரிஸால் கடுப்பான தயாரிப்பாளர்!

பல எதிர்ப்புகளை மீறி வெளியான இரண்டாம் பாகத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் ஈழத் தமிழர்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் கூட்டணி அமைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் காண்பித்துள்ளதால் வரும் காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதான பார்வையை இந்த வெப் சீரிஸ் மாற்றிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வெப் சீரிஸுக்கு எதிராகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? பேமிலி மேன் வெப் சீரிஸால் கடுப்பான தயாரிப்பாளர்!

தற்போது சுரேஷ் காமாட்சி இந்த வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு?? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்… உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். நம் வரலாற்றை நாமே எழுதுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story