பிவிஆர் சினிமாஸ் திரையிடும் கிறிஸ்டோபர் நோலன் ”டெனட்”

பிவிஆர் சினிமாஸ் திரையிடும் கிறிஸ்டோபர் நோலன் ”டெனட்”

தெலுங்கானா அரசு அம்மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்து பிவிஆர் நிறுவனம் டெனட் படத்திற்கான முன்பதிவு வசதியை ஆரம்பித்துள்ளனர்.

டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், மைக்கல் கெய்ன், டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகை டிம்பில் கபாடியாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Image

டெனட் திரைப்படம், டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

தற்போது தெலங்கானாவில் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் டெனட் படத்தை முதலில் திரையிட முடிவு செய்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலன் படம் என்பதால் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று அப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளுடன், 50% சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கும் என்றும் பிவிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

Share this story