ஹிந்திக்கு ஒரு ரகம், இங்க வேற ஒரு ரகம்… பிரபாஸ் படத்தில் இரு வேறுவிதமான இசையமைப்பாளர்கள்!

ஹிந்திக்கு ஒரு ரகம், இங்க வேற ஒரு ரகம்… பிரபாஸ் படத்தில் இரு வேறுவிதமான இசையமைப்பாளர்கள்!

பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தில் இரு வேறுவித இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பிரபாஸ் ராதா கிருஷ்ணகுமார் என்பவரின் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ (Radhe Shyam) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

ஹிந்திக்கு ஒரு ரகம், இங்க வேற ஒரு ரகம்… பிரபாஸ் படத்தில் இரு வேறுவிதமான இசையமைப்பாளர்கள்!

தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட் என்னவென்றால், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ராதே ஷ்யாம் படத்திற்கு இசையமைக்கிறார் என்றே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தி வெர்ஷனுக்கு மிதூன் மற்றும் மனன் பரத்வாஜ் இருவரும் இசையமைக்க உள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் சினிமா கேரியரில் இதுதான் அவருக்கு மிகப்பெரிய பெட்ஜெட் படம்.

ஹிந்திக்கு ஒரு ரகம், இங்க வேற ஒரு ரகம்… பிரபாஸ் படத்தில் இரு வேறுவிதமான இசையமைப்பாளர்கள்!

பாலிவுட் ரசிகர்களுக்கு வேறு இசையும், தென்னிந்திய ரசிகர்களுக்கு வேறு ரக இசையையும் வழங்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இந்த புது முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் ஏற்கனவே பல படங்களில் தன் இசைத் திறமையை நிரூபித்துள்ளார். தற்போது பாலிவுட் வெர்ஷனில் எந்த மாதிரியான இசை வரப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Share this story