‘ராஜா ராணி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை…

‘ராஜா ராணி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை…

‘ராஜா ராணி’ சீரியலில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

‘ராஜா ராணி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை…

அதிக பார்வையாளர்கள் கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ராஜா ராணி’. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ‘திருமணம்’ சீரியலில் நடித்த சித்து இதில் ஹீரோவாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

‘ராஜா ராணி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை…

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பிரவீனா, சைவம் ரவி, பாலாஜி தியாகராஜன் தயாளன், வி.ஜே.அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மாமியார், மருமகள் இடையே நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து காட்சிகள் நகர்ந்து வருகிறது.

‘ராஜா ராணி’ சீரியலில் இணைந்த பிரபல நடிகை…

இந்நிலையில் இந்த சீரியலில் நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்ட் கலைஞருமான ஸ்ரீலேகா ராஜேந்திரன் இணைந்துள்ளார். இவர் வாணி ராணி, அன்பே வா, கோலங்கள், உள்ளிட்ட பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். இந்த சீரியலை தற்போது விறுவிறுப்பாக்க இயக்குனர் முடிவு செய்துள்ளனர்.இதற்காக பல மிரட்டலாக கேரக்டர்களை கொண்டு வந்துள்ளனர்.

Share this story