Friday, March 5, 2021

Movie Stills

டூயட் பாடி ஆடலாம் என்று ஆர்வமாக வந்த ரஜினி… அசராமல் உட்கார்ந்தபடியே இருந்த ஸ்ரீதேவி..!?

ரஜினிகாந்த் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஸ்ரீதேவி அதிகமாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருப்பார். தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று இன்று வரைக்கும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது கமல் ஸ்ரீதேவி ஜோடிதான். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி அவர்கள் இருவருக்கும். அந்த காலகட்டத்தில் முன்னேறிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவியுடன் ஆரம்ப கால படங்களில் எல்லாம் அவருக்கு வில்லனாகவே நடித்தார். “16 வயதினிலே” “மூன்று முடிச்சு” “காயத்ரி” என மூன்று படங்களிலும் ரஜினிகாந்த் ஸ்ரீதேவிக்கு வில்லன்தான், ஜோடி கிடையாது. “வணக்கத்துக்குரிய காதலியே” படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தார்கள், ஆனால் ஸ்ரீதேவி ரஜினிக்கு ஜோடி இல்லை.
For dear friend Sridevi, Rajinikanth and wife Latha break 37-year ...
ரஜினிகாந்த் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம் கிடைக்கிறது. முதன்முதலாக 1979ஆம் ஆண்டு ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி ஜோடி சேருகிறார். படம் “தர்மயுத்தம்” இசை இளையராஜா. ஸ்ரீதேவியுடன் அமர்க்களமாக ஒரு டூயட் பாடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இளையராஜாவும் ஒரு எக்ஸ்ட்ராடினரி டியூனை போட்டு கொடுக்கிறார். அந்த பாடல் இன்றுவரை எவர்கிரீன் டூயட் பாடலாக இருக்கும், ”
ஆகாய கங்கை பூந்தேன் மலர்சூடி
பொன் மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்கலம் நாடுதே சங்கமம்
குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்கலம் நாடுவான் சங்கமம்” என்ற பாடல்.

ஸ்ரீதேவியுடன் முதன்முதலில் ஒரு டூயட் ஆடப் போகிறோம் என்று அன்று வளர்ந்து கொண்டிருக்கும் நடிகரான ரஜினி ஆசையுடன் எதிர் பார்த்திருக்க, அவரது கனவு சிதைக்கிறது!. ரஜினிகாந்த் உடன் ஆட முடியாத நிலையில் இருக்கிறார் ஸ்ரீதேவி. குறிப்பிட்ட பாடல் படப்பிடிப்புக்கு முன்பு ஸ்ரீதேவி காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்க கூட முடியாமல் இருக்கிறார். ஏற்கனவே தர்மயுத்தம் படத்தின் அனைத்து ஷூ ட்டிங்குகளும் முடிந்துவிட்ட நிலையில், அந்த பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி . இப்பொழுது படப்பிடிப்பை உடனடியாக நடத்த வேண்டிய கட்டாயம். ஷூட்டிங் யூனிட் காத்துக்கொண்டிருக்கிறது.

கால் சரியான பின், ஷூட்டிங் நடத்தி கொள்ளலாமா என்று கேட்கிறார், இயக்குநர் R.C. சக்தி, மறுத்துவிடுகிறார் ஸ்ரீதேவி. ஏற்பட்டிருப்பது காலில் எலும்பு முறிவு, அது சரியாக ஓரிரு மாதங்கள் ஆகலாம், அதுவரை அவர்களை காக்க வைக்க ஸ்ரீதேவிக்கு விருப்பமில்லை.
இல்லை எனக்காக ஷூட்டிங் கேன்சல் செய்ய வேண்டாம், சூட்டிங் தொடரட்டும் என்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியால் நடக்கக்கூட கஷ்டம் என்பதே உண்மை. அருமையாக நடனம் ஆடும் ஸ்ரீதேவியை எப்படி நடனம் ஆடாமல் வைத்துக் டூயட் பாடலை எடுப்பது? இந்தக் காலக்கட்டம் என்றால் கவலையே படவேண்டியதில்லை! ஸ்ரீதேவி கேரக்டரையே 3டியில் உருவாக்கி அனிமேஷனில் ஆட விட்டு அதகளம் பண்ணிருக்கலாம்..அன்றைக்கு நிலைமை அப்படியில்லையே..! என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தோடேயே ஷூட்டிங்கு ஏற்பாடு பண்ணிவிட்டார்கள். ஸ்ரீதேவியும் காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் ஸ்பாட்டுக்கு வருகிறார். பாடல் காட்சியும் படமாக்கி ரிலீஸும் ஆகி ஹிட்டடிக்கிறது.இந்த செய்தியைப் படிக்கும்போது முடிந்தால் அந்தப் பாடல்காட்சியை ஒரு முறை யூடியூப்பில் போய் பார்த்துவிடுங்கள்.

பாடல் முழுவதும் ரஜினிகாந்த் தான் நடந்து கொண்டிருப்பார். ஸ்ரீதேவி ஒரு இடத்தில் அமர்ந்தவாறு ரஜினிகாந்துடன் அந்த பாடல் முழுவதும் டூயட் பாடிக் கொண்டிருப்பார்.. ஒரே நாளில், கிண்டி ரேஸ் கோர்ஸ் லொகேஷனில் அந்த பாடல் முழுவதையும் எடுத்து முடித்து இருப்பார், இயக்குனர் RC சக்தி.
இப்பொழுதும் அந்த பாடலை பாருங்கள், அந்த பாடல் முழுக்க ஸ்ரீதேவி அமர்ந்து கொண்டே இருப்பார்.
ஒரு நான்கு ஷாட்டுகள் மட்டுமே ஸ்ரீதேவி எழுந்து நிற்பார், அதில் ஒரு ஷாட்டில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் கையை பிடித்து எழுந்திருக்க உதவுவார். இன்னொரு ஷாட்டில் ஸ்ரீதேவி எழுந்தவுடன், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை தூக்கிக் கொள்வார். கடைசி ஷாட்டில், நடக்கும்போது லாங் ஷாட் வைத்து சமாளித்து இருப்பார்கள்.

விழுந்தாலும் யானை ஆயிரம் பொன் என்பது போல, அமர்ந்து இருந்து நடித்தாலும் தன் அழகிய பெர்ஃபார்மன்ஸில் அந்த பாடலில் ஸ்ரீதேவி அனைவரையும் கவர்ந்து விடுவார்.
நடந்தாலும் ரஜினியின் நடை நடனம்தான். அமர்ந்தாலும் ஸ்ரீதேவி அழகு தான்.
-ஜேம்ஸ் டேவிட்

Latest Posts

‘வடசென்னை 2’ படம் குறித்து வெற்றிமாறன் கொடுத்துள்ள அப்டேட்!

வடசென்னை 2 எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் இருவரும் கூட்டணிக்கு கோலிவுட்டில் எப்போதும் பெரும் வரவேற்பு கிடைத்து...

Actress

TTN Cinema