ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படத்திற்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்!

ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படத்திற்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்!

தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள மர்டர் படத்திற்கான தடையை நீதிமன்றம் விலக்கி தீர்ப்பளித்துள்ளது.

தெலுங்கானாவை உலுக்கிய ஒரு கவுரவக் கொலை சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்ற படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. பிரணய் (24) என்ற தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர், உயர்வகுப்பைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். அதையடுத்து அம்ருதாவின் குடும்பத்தினர் பிரணயை ​​கூலிப்படையை வைத்து சுட்டுக் கொன்றனர்.

ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படத்திற்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்!

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் மர்டர் என்ற படத்தை ராம் கோபால் வர்மா எடுத்துள்ளார். ஆனால் கொலை செய்யப்பட்ட பிரணயின் மனைவி அம்ருதா இந்தப் படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதையடுத்து, இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஆணவக் கொலை தொடர்பான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, இந்தப் பட வேலைகளைத் தொடங்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படத்திற்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்!

எனவே கீழ் நீதிமன்றம் வழங்கிய தடையை எதிர்த்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் ராம் கோபால் வர்மா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், தற்போது அப்படத்திற்கான தடையை விலக்கியுள்ளனர்.

இருப்பினும், படத்தில் பிரணய் மற்றும் அம்ருதாவின் பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதுடன், ஏற்கனவே அசல் பெயர்களைப் பயன்படுத்தியிருந்தால் மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. படக்குழுவினரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Share this story