’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…

’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…

கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வரும் சூழலிலும், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி, அதற்காக rgvworldtheatre என்ற பெயரில் இணைய திரையரங்கை உருவாக்கி அதில் வெளியிட்டு வருகிறார் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா. ஏற்கெனவே க்ளைமேக்ஸ், நேக்கட் என இரண்டு ஆபாச படங்களை வெளியிட்டு நல்ல வசூல் பார்த்தார். அவர் வெளியிடும் படங்களுக்கு அவரே கட்டணம் நிர்ணயித்து வருகிறார்..
’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…
சர்ச்சையான விஷயங்களையே படம் எடுத்து வந்த ராம்கோபால் வர்மா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாணின் வாழ்க்கையை தழுவி தற்போது பவர்ஸ்டார் என்கிற பெயரிலேயே படத்தை எடுத்துள்ளார்.. இந்த படம் இன்று வெளியானது.  தொடர்ந்து பவன் கல்யாணை சீண்டி வரும் ராம் கோபால் வருமா, அவரைப்  போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நடிகரை வைத்து  சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…
இதனால் கடுப்பான பவன் கல்யாண் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை சர்ச்சை இயக்குநரே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரை பற்றிய செய்திகள் பரபரப்பாக இருந்தாலும், எதற்கும் கவலைப்படாமல் தனது அடுத்த ஆபாச படமான, திரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட்  லுக்கை வெளியிட்டிருக்கிறார்..
’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…
திரில்லர் படத்துக்கான வேலைகளில் ஏற்கெனவே இறங்கிவிட்ட அவர், இதில் ஒடிசாவைச் சேர்ந்த அப்ஸரா ராணி என்ற பெண்னை களமிறக்கியிருக்கிறார். பட அறிவிப்பு நாள் முதல் அப்ஸரா ராணியின் அறைகுறை ஆடை புகைப்படங்களையும், திரில்லர்  படத்தின் சில ஃபோட்டகளையும் வெளியிட்டிருந்தார்..
’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…
அந்த ஃபோட்டோஸே படு கவர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் கவர்ச்சியைக் கூட்டியிருக்கிறது..  தனது முதல் படத்திற்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருந்த ராம்கோபால் வர்மா, நேக்டு படத்திற்கு ரூ200 வைத்திருந்தார்..இருந்தபோதிலும் அவை இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன.
’திரில்லர்’ ஆபாச படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராம் கோபால் வர்மா…
இந்த படத்தின் போஸ்டர்களில் நாயகி உடை அணியாமல் படு கவர்ச்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னும் கவர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப் போகிறாரோ எனவும் ரசிகர்கள் கலக்கமான எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Share this story