த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் ராணா!?

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் ராணா!?

த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராணா நடிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலையாளத்தில் 2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதையடுத்து இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம், சீனா மொழியில் கூட ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் ராணா!?

பின்னர் த்ரிஷ்யம் 2 திரைப்படம் கடந்த மாதம் 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் அமோக வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதை ஜீத்து ஜோசப் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கின் முதல் பாகத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் ராணா!?

மலையாளத்தில் த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் நடிகர் முரளி கோபி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் ராணா!?

வெங்கடேஷ் ராணாவின் நெருங்கிய உறவினர் என்பதால் ராணா இப்படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

Share this story