அண்ணன் தம்பியுடன் ஜோடி சேரும் தெலுங்கு பட நாயகி !

அண்ணன் தம்பியுடன் ஜோடி சேரும் தெலுங்கு பட நாயகி !

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் தெலுங்கு பட நடிகை ரஷ்மிகா மந்தனா ஜோடி சேர்கிறார்.

அண்ணன் தம்பியுடன் ஜோடி சேரும் தெலுங்கு பட நாயகி !

சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்திலும், கௌதம் மேனன் இயக்கியிருக்கும் வெப் தொடரிலும் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார் சூரியா.

அண்ணன் தம்பியுடன் ஜோடி சேரும் தெலுங்கு பட நாயகி !

இதில் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் திரைப்படம் சூர்யாவின் 40வது திரைப்படமாகும். இதனால் இப்படத்தை ”சூர்யா40” என்று அழைத்து வருகின்றனர். இப்படத்தை குறித்த தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளிவராத நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி யார் என்ற விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அண்ணன் தம்பியுடன் ஜோடி சேரும் தெலுங்கு பட நாயகி !

அதன்படி தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ரஷ்மிகா சமீபத்தில் தான் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் கார்த்தியின் அண்ணன் சூர்யா உடனும் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Share this story