எலுமிச்சம் பழ நிற அழகில் மயக்கும் ரஷ்மிகா!

எலுமிச்சம் பழ நிற அழகில் மயக்கும் ரஷ்மிகா!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மஞ்சள் உடை போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

நடிகை ரஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு அல்லாமல் மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

எலுமிச்சம் பழ நிற அழகில் மயக்கும் ரஷ்மிகா!

தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்மிகாவின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

எலுமிச்சம் பழ நிற அழகில் மயக்கும் ரஷ்மிகா!

நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா UR life co.in என்ற நிறுவனத்திற்காக இந்த போட்டோஷூட் செய்துள்ளார் ரஷ்மிகா. UR life மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து உணவு பற்றி மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார் உபாசனா. சமந்தா கூட உபாசனாவின் UR life யூடியூப் சேனலுக்காக ஆரோக்கியமான உணவுகள் சமைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்.

தற்போது ரஷ்மிகா UR life நிறுவனத்தில் சிறப்பு எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக கையில் ஆரஞ்சு பழத்துடன் மஞ்சள் நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story