சந்தானம் பிறந்தநாள்… சபாபதி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சந்தானம் பிறந்தநாள்… சபாபதி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

காமெடி நடிகர் சந்தானம் பிறந்தநாளையொட்டி சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

சந்தானம் எப்போதும் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன.

சந்தானம் பிறந்தநாள்… சபாபதி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இதையடுத்து சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜனவரி 19-ஆம் தேதி வெளியான இந்த படத்தின் டிரெய்லர் பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்றது. சந்தானம் கானா பாடகராக தோன்றும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் காமெடி கலாட்டா செய்துள்ளனர்.

சந்தானம் பிறந்தநாள்… சபாபதி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய படம் சபாபதி. முழுக்க முழுக்க காமெடியாக வெளிவரவிருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிக்கிறார். புதுமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சந்தானம் பிறந்தநாள்… சபாபதி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இன்று படத்தின் ஹீரோ நடிகர் சந்தானத்தின் பிறந்த நாள் என்பதால் அதையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. Happy Birthday santhanam என குறிப்பிட்ட அந்த போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story