திரைப்படமானது மும்பை தீவிரவாத தாக்குதல் ஹீரோவின் கதை… ‘மேஜர்’ படம் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

திரைப்படமானது மும்பை தீவிரவாத தாக்குதல் ஹீரோவின் கதை… ‘மேஜர்’  படம் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

மும்மை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஒரு ரியல் ஹீரோவின் கதை, மேஜர் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாக உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட கொடூர தாக்குதலில் உயிர் நீத்த சந்தீப் உன்னி கிருஷ்ணனின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் உன்னிகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் அதிவி சேஷ் நடித்துள்ளார். சாக்ஷி கிரண் டிக்கா இயக்கியுள்ள இப்படத்தில் சையி மஞ்சரேக்கர், சோபிதா துளிப்பாளா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படமானது மும்பை தீவிரவாத தாக்குதல் ஹீரோவின் கதை… ‘மேஜர்’  படம் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

‘மேஜர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சோனி பிட்டர்ஸ் பிலிம்ஸ் இந்தியா, ஜி.எம்.பி.என் எண்டெர்டைன்மெண்ட் மற்றும் ஏ.ப்ளஸ்.எஸ் மூவிஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சந்தீப் உன்னி கிருஷ்ணன் எவ்வாறு தீவிரவாதிகளை அழித்து தன் இன்னூயிரை விடுகிறார் என்பதை தத்ரூபமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார்.

திரைப்படமானது மும்பை தீவிரவாத தாக்குதல் ஹீரோவின் கதை… ‘மேஜர்’  படம் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதோடு இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 2ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகிறது.

Share this story