சதீஷ் – பவித்ரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…. புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு…

சதீஷ் – பவித்ரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…. புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு…

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சதீஷ் – பவித்ரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…. புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு…

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் புதிய படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா நடிக்கிறார். முதல்முறையாக சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். ஒளிபதிவு பணிகளை பிரவீன் கவனிக்கிறார்.

சதீஷ் – பவித்ரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…. புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு…

நேற்று இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ், பவித்ரா, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த படம் காமெடி கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் நாள் ஷூட்டிங் தொடங்கியுள்ளதை படக்குழு சார்பில் வீடியோவாக வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this story