‘துக்ளக் தர்பார்’ பட விவகாரம்… நடிகர் பார்த்திபனுக்கு ஏடாகூட எச்சரிக்கை விடுத்த சீமான் தம்பி.!?

‘துக்ளக் தர்பார்’ பட விவகாரம்… நடிகர் பார்த்திபனுக்கு ஏடாகூட எச்சரிக்கை விடுத்த சீமான் தம்பி.!?

விஜய் சேதுபதி, ஆர்.பார்த்திபன் இணைந்து நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே நாம் தமிழர் கட்சி தம்பிகள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை உண்டு பண்ணியிருக்கிறது! அந்தப் படத்தில் பார்த்திபன் அரசியல்வாதியாக வருகிறார். படத்தில் அவருக்கு வைத்துள்ள பெயரும், கட்சிக் கொடியின் கலரும் அப்படியே நாம் தமிழர் கட்சியை நினைவு படுத்துவதாக இருக்கிறது என்றுதான் இரண்டு நாளாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘துக்ளக் தர்பார்’ பட விவகாரம்… நடிகர் பார்த்திபனுக்கு ஏடாகூட எச்சரிக்கை விடுத்த சீமான் தம்பி.!?

அது தெரிந்த ஆர்.பார்த்திபன் சீமானிடம் பேசி விளக்கம் கொடுத்திருக்கிறார். அவரும் பெரிதாக ரியாக்ட் பண்ணாமல் கேட்டுக்கொண்டாராம்! இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன். அதைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தென் மண்டலப் பொறுப்பாளர் பொறியாளர். வெற்றிகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதை அடுத்தபாராவில் அப்படியே கொடுத்திருக்கிறோம்.

‘துக்ளக் தர்பார்’ பட விவகாரம்… நடிகர் பார்த்திபனுக்கு ஏடாகூட எச்சரிக்கை விடுத்த சீமான் தம்பி.!?

‘துக்ளக் தர்பார் திரைப்பட விவகாரம் குறித்து சீமானிடம் பேசிவிட்டேன். அவர் பெருந்தன்மையோடு பதிலளித்தார் என திரு பார்த்திபன் அவர்கள் ட்விட் செய்துள்ளார்.
திரு. பார்த்திபன் அவர்களே… எங்களின் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அடிக்கடி சொல்வார்.. எமது தேசியத்தலைவர் பிரபாகரன் அளவுக்கு நான் நல்லவன் கிடையாது. அவர் அளவுக்கு இரக்க குணம் கொண்டவன், பெருந்தன்மையானவன் கிடையாது என்று.

‘துக்ளக் தர்பார்’ பட விவகாரம்… நடிகர் பார்த்திபனுக்கு ஏடாகூட எச்சரிக்கை விடுத்த சீமான் தம்பி.!?


அதுபோலதான் நாங்களும் சொல்கிறோம் நாங்களும் எங்கள் அண்ணன் சீமான் அளவிற்கு நல்லவர்களோ, பெருந்தன்மையானவர்களோ கிடையாது. நாம் தமிழர் கட்சியையோ, அண்ணன் சீமான் அவர்களையோ அவமதிக்கும் வகையில் திரைப்படத்தின் காட்சிகள் இருந்தால் தம்பிகள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பு:- எங்களின் பலம் என்ன என்பது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும்

Share this story