“ஹீரோ அந்தஸ்து காட்டாமல் எளிமையாக நன்றி வணக்கம்”… ‘800’ படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் கூறிய சீனு ராமசாமி!

“ஹீரோ அந்தஸ்து காட்டாமல் எளிமையாக நன்றி வணக்கம்”… ‘800’ படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் கூறிய சீனு ராமசாமி!

விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகியதாக அறிவித்ததை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பு வெளியானத்திலிருந்தே பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“ஹீரோ அந்தஸ்து காட்டாமல் எளிமையாக நன்றி வணக்கம்”… ‘800’ படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் கூறிய சீனு ராமசாமி!

இந்நிலையில் சற்று முன்பு முத்தையா முரளிதரன் வெளியிட்டிருந்த அறிக்கையில்

“என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘நன்றி வணக்கம்’ என்று விஜய் சேதுபதி பதிலளித்திருந்தார். அந்தப் பதிலின் மூலம் விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகியது உறுதியானதாகக் கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

“தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல்
எப்போதும் போல எளிமையாக
நன்றி வணக்கம்
என்று தன்னை நாடி வந்தவருக்கு
விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/seenuramasamy/status/1318147500050542592

Share this story