‘ரகிட ரகி’ட பாடலுக்கு செல்வராகவன் போட்ட ஆட்டம்!

‘ரகிட ரகி’ட பாடலுக்கு செல்வராகவன் போட்ட ஆட்டம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டாலே குத்தாட்டம் போடவேண்டும் என்று தோன்றும்.

தற்போது இயக்குனர் செல்வராகவன் ரகிட ரகிட பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. காரில் சென்று கொண்டிருக்கும் செல்வராகவன் ரகிட ரகிட பாட்டைக் கேட்டு கட்டுப்படுத்த முடியாமால் ஆடியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். முற்றிலும் வேறுவிதமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Share this story