ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்!

ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்!

2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் ‘ஜல்லிக்கட்டு’ படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. லிஜோ ஜோஸ் தனது படங்களில் பொதுவாகவே சமூக பிரச்சினைகளை மிகவும் நுட்பமாக பிளாக் காமெடி மூலம் ரசிக்கும் படி வெளிப்படுத்துவார்.

ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்!

ஜல்லிக்கட்டு படமும் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது குறித்து பேசியிருந்தது. இந்தப் படத்திற்கு விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்தது. டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

தற்போது இந்தப் படம் 2020-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழாவிற்கு மலையாளப் படம் அனுப்பப்படுவதால் மலையாள ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆஸ்கருக்கு அனுப்பப்படும் ஜல்லிக்கட்டு… இயக்குனர் செல்வராகவன் புகழாரம்!

இதையடுத்து இந்தியத் திரைத்துறையினர் அனைவரும் ஜல்லிக்கட்டு படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். தற்போது இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் ஜல்லிக்கட்டு படத்தைப் பார்த்து ரசித்தேன். ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அழகான திரைப்படத்தின் மூலம் நாம் ஆஸ்கர் வெல்ல அதிக நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story