கருமையாக இருப்பதற்காக புண்படுத்தப்பட்ட சுஹானா கான்… சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகும் ஷாருக் கான் மகளின் கருத்து!

கருமையாக இருப்பதற்காக புண்படுத்தப்பட்ட சுஹானா கான்… சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகும் ஷாருக் கான் மகளின் கருத்து!

ஷாருக் கானின் மகள் சுஹானா கான், அவரின் நிறம் குறித்து விமர்சிக்கப்படும் கருத்துக்கள் குறித்த தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். கருமையான மேனியைக் கொண்டதால் தான் எவ்வாறு புண்படுத்தப்பட்டேன் என்பது குறித்தும் தெரிவித்திருந்தார். தற்போது சுஹானாவின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கருமையாக இருப்பதற்காக புண்படுத்தப்பட்ட சுஹானா கான்… சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகும் ஷாருக் கான் மகளின் கருத்து!

“இப்போது இது அதிகமாக நடந்து வருகிறது. இது நாம் சரிசெய்ய வேண்டிய பிரச்சினைகளில் ஒன்றாகும் !! இது என்னைப் பற்றியது மட்டுமல்ல, எந்தவொரு காரணமும் இல்லாமல் தாழ்மை உணர்வுடன் வளர்ந்த ஒவ்வொரு இளம் பெண்/இளைஞனைப் பற்றியது. எனது தோற்றத்தைப் பற்றிய சில கருத்துகள் இங்கே. எனக்கு 12 வயதிலிருந்தே, முழு வளர்ந்த ஆண்களாலும் பெண்களாலும், என்னுடைய கருமையான மேனியின் காரணமாக நான் அசிங்கமாக இருக்கிறேன் என்று விமர்சிக்கப்பட்டேன். இவர்கள் உண்மையாகாவே இளைஞர்கள் என்ற உண்மையைத் தவிர, சோகமான விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் இந்தியர்களாக இருக்கிறோம், அது தானாகவே நம்மை பழுப்பு நிறமாக்குகிறது – ஆம் நாங்கள் வெவ்வேறு நிழல்களில் வருகிறோம், ஆனால் மெலனின் நிறமியிலிருந்து உங்களைத் தூர விலக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களால் அது முடியாது.

கருமையாக இருப்பதற்காக புண்படுத்தப்பட்ட சுஹானா கான்… சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகும் ஷாருக் கான் மகளின் கருத்து!

இந்த வேறுபட்டு காரணமாக உங்களின் சொந்த நபர்களை வெறுப்பது என்பது நீங்கள் வலிகளுடைய பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. இதை சமூக ஊடகங்கள், திருமண வரன்கள் அல்லது உங்கள் சொந்த குடும்பங்கள் கூட உங்களை நம்பவைத்திருந்தால் மன்னிக்கவும், நீங்கள் 5′ 7 உயரம் மற்றும் அழகுடன் இல்லையென்றால் நீங்கள் அசிங்கமானவர்கள். இது நான் 5″ 3 மற்றும் பழுப்பு நிற மேனியுடையவள் என்பதை அறிய உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். நான் இப்படி இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீங்களும் அப்படி இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தி பேசாத எல்லா மக்களுக்கும், நான் ஒரு சிறிய விளக்கம் கொடுக்க நினைத்தேன். இந்தியில் கருப்பு நிறத்திற்கான சொல் “காலா”. கருமை நிறமுள்ள ஒரு பெண்ணை விவரிக்க “காளி” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது ஒரு போதும் நேர்மறையான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. ” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story