வைஜயந்தி மாலா, ரேகா, ஸ்ரீதேவி வரிசையில் தற்போது ஷ்ரத்தா கபூர்!

வைஜயந்தி மாலா, ரேகா, ஸ்ரீதேவி வரிசையில் தற்போது  ஷ்ரத்தா கபூர்!

நடிகை ஷ்ரத்தா கபூர் நாகினி சீரிஸ் படங்களில் நாகினியாக நடிக்க உள்ளார்.

விஷின் ஃபுரியா இயக்கவிருக்கும் நாகினி ட்ரைலாஜி படங்களில் ஷ்ரத்தா கபூர் நாகினியாக நடிக்க உள்ளார். நிகில் திவேதி தயாரிப்பில் உருவாகும் இப்படம் காதல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வைஜயந்தி மாலா, ரேகா, ஸ்ரீதேவி வரிசையில் தற்போது  ஷ்ரத்தா கபூர்!

இதற்கு முன்னர் பாலிவுட்டில் வெளியான நாகினி படங்களில் 1954-ம் ஆண்டு வைஜெயந்தி மாலாவும், 1976 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் வெளியான நாகினியில் நடிகை ரேகாவும், 1986-ல் நடிகை ஸ்ரீதேவியும், இச்சாதாரி நாகமாக நடித்துள்ளனர். தற்போது நடிகை ஷ்ரத்தா கபூரும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

வைஜயந்தி மாலா, ரேகா, ஸ்ரீதேவி வரிசையில் தற்போது  ஷ்ரத்தா கபூர்!

“முதல் முறை நாகினி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு முழுமையான மகிழ்ச்சி. ஸ்ரீதேவி, நிகாஹென் ஆகியோர் வரிசையில் நானும் நடிப்பது எனக்கு பெருமை. எப்போதும் இந்திய பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளில் வேரூன்றிய இதேபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இது ஒரு முத்திரை பதித்த கதாபாத்திரத்தில் நடிப்பதைப் போன்றது, இது எப்போதும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது ”என்று ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.

ஷ்ரத்தா கபூர் கடைசியாக டைகர் ஷிராஃப் உடன் ‘பாகி 3’ படத்தில் நடித்திருந்தார்.

Share this story