நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்காக மாலத்தீவு செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஜல் மாலத்தீவில் தான் ஹனிமூன் கொண்டடினார். அதையடுத்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் அங்கு சென்றார். பிகினியில் காட்சியளித்து இளைஞர்களுக்கு சற்று விருந்து வைத்தார். பின்னர் சமந்தாவும் மாலத்தீவிற்கு சென்று பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்த வரிசையில் தற்போது சிம்புவும் இணைந்துள்ளார். ஆம். படப்பிடிப்பிற்காக சிம்பு மாலத்தீவு போகப்போகிறாராம்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் மஃப்டி படத்தில் கவுதம் கார்த்திக் உடன் சிம்பு நடிக்க உள்ளார். கன்னட திரைப்படமான ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். கன்னடத்தில் இயக்கிய நர்தன் தான் இப்படத்தை தமிழிலும் இயக்கவிருக்கிறார். சிம்புவின் 45வது திரைப்படமாக உருவாகும் இப்படம் மெகா பட்ஜெட்டில், ஆக்ஷன் கலந்த திரில்லர் ஜானரில் உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிம்பு தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து வருகிறார். அதையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.