‘பத்து தல’ படத்தில் தனுஷ் பட நடிகர்… படுஸ்பீடு காட்டும் சிம்பு…

‘பத்து தல’ படத்தில் தனுஷ் பட நடிகர்… படுஸ்பீடு காட்டும் சிம்பு…

பத்து தல படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளநிலையில், நடிகர் தனுஷ் படத்தில் நடித்த டிஜே அருணாச்சலம் இணைந்துள்ளார்.

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. 28 நாட்களில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்து படுஸ்பீடாக இருக்கிறார் சிம்பு, அதேவேகத்தில் தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார்.

‘பத்து தல’ படத்தில் தனுஷ் பட நடிகர்… படுஸ்பீடு காட்டும் சிம்பு…

இந்நிலையில் கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இயக்க உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கவுதம் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறார்.

‘பத்து தல’ படத்தில் தனுஷ் பட நடிகர்… படுஸ்பீடு காட்டும் சிம்பு…

இதையடுத்து இந்த படத்தில் அசுரனில் தனுசுக்கு மகனாக நடித்து பிரபலமான டீஜே அருணாச்சலம் நடிக்கிறார். தனக்கு பிடித்த 90ஸ் ஹீரோக்களில் சிம்புவும் ஒருவர் என தெரிவித்துள்ள டீஜே, அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தற்போது அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this story