நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்… சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு!

நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்… சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை விண்ணைத் தொட்டு வருகிறது. எனவே அரசு மக்களிடையே கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்… சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு!

“கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுப்பதற்காக நமது தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதை தடுப்பதற்காக நமது தமிழக அரசும் காவல்துறையும் நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். நமக்கு நிறைய விதிமுறைகளையும் சொல்லியிருக்கிறார்கள்.
அதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது.

வீட்டை விட்டு மிக மிக அவசியம் என்றால் மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

நம்முடைய கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் விட மிக முக்கியமானது வெளியில் போகும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். இது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான்.

இது எல்லாவற்றையும் கடைபிடிப்பது நமது கடமை அதுமட்டுமில்லாமல் கொரோனா பற்றிய எந்த ஒரு பயமும் இல்லாமல் தன் குடும்பத்தையும் மறந்து நம் எல்லாருக்காகவும் இந்தக் கொரோனாவை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கும் முன்களப்பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அதுவாகத்தான் இருக்கும். நாம் அனைவரும் நினைத்தால் இதிலிருந்து நிச்சயமாக மீண்டு வர முடியும்.

ஒன்றிணைவோம் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம். மக்களை காப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story