தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சூரரைப் போற்று!

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சூரரைப் போற்று!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் 11-ம் தேதி இரவு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சூர்யாவின் அசுரத் தனமான நடிப்பைப் பார்த்து வியக்காதவர்கள் குறைவு என்றே சொல்லலாம். ஓடிடி-யில் வெளியாகும் இந்தப் படம் வரவேற்பு பெறுமா என்ற சந்தேகத்தை உடைத்தெறிந்து இமாலய வெற்றி பெற்றுள்ளது. சூர்யா மட்டுமின்றி சுதா கொங்கரா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பாராட்டப்பட்டு வருகின்றனர்.

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சூரரைப் போற்று!

தற்போது மீண்டும் சூரரைப் போற்று படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.


ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. எனவே அங்கு சூரரைப் போற்று படத்தில் தெலுங்கு டப்பிங்கான ஆகாசம் நீ ஹாதுரா படத்தை முதலாக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனராம்.

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சூரரைப் போற்று!

ஆனால் இதற்கு அமேசான் தளத்திடமிருந்து சிறப்பு அனுமதி ஒன்றை படக்குழு வாங்க வேண்டும். படக்குழு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் முதல் படமாக இப்படத்தை வெளியிட்டால் மக்கள் அதிகமாக தியேட்டருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யாவிற்கு ஆந்திராவில் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story