‘அசுரன்’, ‘சூரரைப்போற்று’ திரைப்படங்கள் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு…

‘அசுரன்’, ‘சூரரைப்போற்று’ திரைப்படங்கள் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு…

78-வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு போட்டிக்கு விதிமுறைகள் மாற்றப்பட்டன. அதில் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களும் கோல்டன் குளோப் மற்றும் அகாடமி விருதுகளில் போட்டியிடத் தகுதியுண்டு என அறிவித்தார்கள்.

‘அசுரன்’, ‘சூரரைப்போற்று’ திரைப்படங்கள் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு…

இதில் தமிழிலிருந்து ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப் போற்று’ஆகிய படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்கான உலகளாவிய திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளது. இதனால் இரண்டு படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

‘அசுரன்’, ‘சூரரைப்போற்று’ திரைப்படங்கள் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு…

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக கோல்டன் குளோப் விருது வழங்கப்படுகிறது.

‘அசுரன்’, ‘சூரரைப்போற்று’ திரைப்படங்கள் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு…

Share this story