இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

சினிமாவில் எத்தனையோ நடிகர் நுழையலாம், உருவாக்கலாம், உருவாக்கப்படலாம் . ஆனால் ரசிகர்கள் எல்லோரையும் தங்களின் ஆஸ்தான நடிகராக அங்கீகரித்துவிடுவதில்லை. அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் வெகு சிலரே.

அப்படி இந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் மாதவன். இந்தியாவின் 7 மொழிகளில் நடித்துள்ளார். இந்திய அளவில் மார்க்கெட் இருக்கும் வெகு சில நடிகர்களில் மாதவன் முக்கியமானவர். 90-ஸ் பெண்களின் கனவுக் கண்ணன். சாக்லேட் பாய் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தன் வாழ்க்கையைத் துவங்கிய மாதவன் இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரு ஒரு படம் நடித்திருந்தார். இயக்குனர் மணிரத்னம் தான் மாதவனை ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகமான முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். குறிப்பாக பெண்கள் மனதில். தமிழில் வெளியான சிறந்த காதல் படங்களில் அலைபாயுதே எப்போதும் முதல் வரிசையில் நிற்கும்.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘மின்னலே’ படத்தில் ன் நடித்தார். அதகளம் செய்யும் கல்லூரி மாணவராக மிரட்டியிருந்தார். மறுபுறம் ரீமாசென் உடனான காதல் காட்சிகளில் அலைபாயுதே மாதவனையும் கண்ணில் காண்பித்தார். ஏற்கனேவே பல ரசிகர்களைக் கவர்ந்த மாதவன் மாஸான கல்லூரி மாணவனாக நடித்து இளைஞர்களையும் தான் வசப்படுத்தினார்.

பின்னார் அழகம்பெருமாள் இயக்கித்தில் ‘டும் டும் டும்’. அந்தப் படமும் வெற்றி தான். சாக்லேட் பாய், காதல் மன்னன் என்று மக்கள் அவரைப் பார்க்க ஆரம்பித்த காலம். மக்கள் தன்னை சாக்லேட் பாய் என்ற வரையறைக்குள் கொண்டு வந்ததால் தன்னுடைய நடிப்புத் திறமையைக் காண்பிக்கவும் மாதவன் விரும்பினார். அதற்கு பெரும் உதவியாக அமைந்தது கன்னத்தில் முத்தமிட்டாள். ஒரு முன்னணி ஹீரோ பெண்கள் மற்றும் குழந்தைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்தார். தன்னுடைய தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தினார்.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் ‘ரன்’ படத்தில் நடித்தார். ஏற்கனவே ரொமான்ஸ் மற்றும் நடிப்பில் கலக்கிய மாதவன் தற்போது ஆக்ஷனிலும் அதகளம் செய்ய ஆரம்பித்தார்.

பின்னர் கமல்ஹாசன் உடன் ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்தார். படம் வணீக ரீதியாக பல தோல்விகளைத் தழுவினாலும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் வில்லன் போன்ற கதாபாத்திரம். இந்த இரு படங்கள் மூலம் மாதவன் நடிப்பின் மீது கொண்ட காதலை விளங்கிக் கொள்ள முடியும். ரொமான்ஸ் படங்கள் மட்டுமே நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தியிருக்க முடியும். ஆனால் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களையும் தேடிச் சென்று நடித்தார்.

பிரியமான தோழி, சரண் ஜே ஜே, எதிரி, என வரிசையாக பல இயக்குனர்களுடன் கைகோர்த்தார். ரொமான்ஸ் கை கொடுத்த அளவுக்கு ஆக்ஷன் மாதவனுக்கு கை கொடுக்கவில்லை.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

பின்னர் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட கண்ணில் கனல் பறக்கும் வெறி கொண்ட இளைஞனாக ‘தம்பி’ படத்தில் தோன்றினார். யாவரும் நலம் என்ற சிறந்த திரில்லர் படத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் நடித்தார்.

இதற்கு இடையில் இந்தியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். ரங் திபசந்தி, 3 இடியட்ஸ், தாணு வெட்ஸ் மானு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் நடித்து இந்தியிலும் பெரிய மார்க்கெட்டை உருவாக்கினார்.

பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் ‘வேட்டை’ படத்தில் நடித்தார். பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் இறுதியில் எப்படி வீரன் ஆகிறான் என்ற கதைக்களம். படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

பின்னர் தமிழில் நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார் மாதவன். 2012 ‘வேட்டை’ படத்திற்குப் பிறகு 2016-ம் ஆண்டு ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் பக்கம் வந்தார்.

மணிரத்னத்தின் உதவி இயக்குனரான சுதாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் யார் சொல்வதையும் கேட்காத திமிரு பிடித்த சண்டைப் பயிற்சியாளரை அசத்தலாக கண் முன் நிறுத்தினார் மாதவன். சாக்லேட் பாயாக பார்க்கப்பட்ட மாதவன் உண்மையான பாக்சிங் வீரரைப் போலவே உடல்வாகை ஏற்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அதே வெறித்தனம் கொண்ட நடிப்பை ‘விக்ரம் வேதா’ படத்தில் போலீஸ்காரராக வந்து காண்பித்தார். தற்போது மாதவனின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. இதற்கிடையில் மகளிர் மட்டும் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் வந்தார். பின்னர் அனுஷ்கா உடன் நிசப்தம். இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர் என்ற தனது இன்னொரு பக்கத்தையும் மக்களுக்கு நிரூபிக்க முடிவெடுத்த மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறை ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற பெயரில் எழுதி இயக்கியுள்ளார். அந்தப் படம் இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல படங்களில் வெளியாக இருகிறது.

இந்திய சினிமா கொண்டாடும் நடிகர்… மாதவன் பிறந்ததின சிறப்புப் பதிவு!

நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்கள் வெகு சிலரே. மார்க்கெட் போய்விடும் என்று கவலைப்படாத ஒரு நடிகராக வலம் வந்தவர் மாதவன். இந்திய சினிமாவின் திறமையான கலைஞர்களில் மிக முக்கியமானவர் மாதவன். நடிகராக மட்டுமில்லாம சிறந்த மனிதராகவும் தன்னை பல முறை நிரூபித்துள்ளார். ரசிகர்களிடம் மிக கனிவுடன் நடந்துகொள்வார். இயக்குனராகவும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்திய சினிமாவின் சிறந்த நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

Share this story