நிவர் புயலுடன் ஜாலி ஸ்டண்ட் செய்யும் ஸ்டண்ட் சில்வா

நிவர் புயலுடன் ஜாலி ஸ்டண்ட் செய்யும் ஸ்டண்ட் சில்வா

நிவர் புயல் தற்போது காட்டுக் காட்டு என காட்டி வருவதால் மழை சும்மா வெளுத்து வாங்கி வருகிறது. இதனை திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடி ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா நிவர் புயல் காற்றோடு வீடியோ பதிவு ஒன்றை எடுத்து பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் இயக்குனர்களில் முன்னணியில் இருப்பவர் ஸ்டண்ட் சில்வா. இவர் மங்காத்தா, வேலாயுதம், தலைவா, ஜில்லா, மாரி உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களுக்கு ஸ்டண்ட் கோரியோக்ராப் செய்துள்ளார்.

அணைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ள சில்வா நடிகர் விஜயுடன் மீண்டும் மாஸ்டர் படத்தில் இணைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் சில்வா மாஸ்டர் படத்தில் மொத்தம் ஆறு சண்டைக் காட்சிகள் உள்ளதாக கூறி இருந்தார்.மேலும் படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்க வேண்டுமே என வைக்காமல் கதையோட்டத்துடன் கூடிய சண்டைக் காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

Share this story