பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்த சுதா கொங்கரா!?

பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்த சுதா கொங்கரா!?

இயக்குனர் சுதா கொங்கரா பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து இயக்குனராக சுதா கொங்கராவை பலர் கொண்டாடி வருகின்றனர்..

பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்த சுதா கொங்கரா!?

அப்படத்தில் சூர்யாவின் நடிப்பை அடுத்து சுதா கொங்கராவின் இயக்கம் தான் அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனராக அறிமுகமான இறுதிச் சுற்று படத்திலே தனது முத்திரையைப் பதித்துவிட்டார் சுதா கொங்கரா.

தற்போது சுதா அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்த சுதா கொங்கரா!?

இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டனராம். ஆனால் சுதா கொங்காரா அதை மறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து இந்த விவகாரம் டோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சுதா கொங்காரா அடுத்து ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறை எடுக்க இருப்பதாகவும் அதில் மாதவன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story