“அண்ணாத்த” நிலை என்ன ? மீண்டும் சூர்யாவுடன் கைகோர்க்கும் சிவா !

“அண்ணாத்த” நிலை என்ன ?  மீண்டும் சூர்யாவுடன்  கைகோர்க்கும் சிவா !

அண்ணாத்த பட தாமத்தால் சூர்யா படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார் சிறுத்தை சிவா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதாராபத்தில் நடந்து வந்தது. இதில் 4 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

“அண்ணாத்த” நிலை என்ன ?  மீண்டும் சூர்யாவுடன்  கைகோர்க்கும் சிவா !

இதையடுத்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் 40 நாட்கள் ரஜினி சம்பந்தமான காட்சிகளை படமாக்க வேண்டிய நிலையில் ரஜினி உடல்நிலையை கருத்தில்கொண்டு ஏப்ரல் வரை தேதிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டது.

“அண்ணாத்த” நிலை என்ன ?  மீண்டும் சூர்யாவுடன்  கைகோர்க்கும் சிவா !

இந்நிலையில் இப்போதைக்கு படப்பிடிப்பு நடத்தமுடியாத காரணத்தினால், முன்பு எடுக்கவேண்டிய சூர்யா படத்தின் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளார் சிவா. நடிகர் சூர்யா தற்போது பிசியாக இருப்பதால் உடனடியாக இந்த படத்தை ஆரம்பிக்க முடியாது. அதனால் அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துவிட்டு, உடனடியாக சூர்யா படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று நினைக்கிறராம் சிவா. அதனால்தான் தற்போது முதற்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளார் சிவா என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share this story