ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதே இந்த விளம்பரத்தின் நோக்கம்: தனிஷ்க் நிறுவனம் அறிக்கை!

ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதே இந்த விளம்பரத்தின் நோக்கம்: தனிஷ்க் நிறுவனம் அறிக்கை!

தனிஷ்க் நிறுவனம், பல எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து தங்கள் நகை விளம்பரத்தை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

“தனிஷ்க் நிறுவனத்தின் நகை விளம்பரத்தில் இஸ்லாம் குடும்பத்தினரால் அவர்களுடைய இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல காண்பிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து இந்த விளம்பரத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அதைத் தடை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டது.

தற்போது தனிஷ்க் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“இந்த சவாலான காலகட்டத்தில் பல்வேறு தரப்பு மக்கள், ஒரே சமூகமாக மற்றும் குடும்பமாக ஒன்றிணைவதை கொண்டாடுவதும், ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதும் தான் இந்த ஏகத்வம் விளம்பரத்தின் பின்னணியில் உள்ள யோசனை.

இந்த விளம்பரத்தின் நோக்கமே மாற்றப்பட்டு, மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

கவனக்குறைவின் பெயரில் இத்தகைய எதிர்வினைகள் எழுந்ததில் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். மேலும் எங்கள் ஊழியர்கள், கூட்டாளர்கள் மற்றும் கடை ஊழியர்களின் புண்படுத்தும் உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

Share this story